மகாபாரதக்கதையில்
"அய்யோ... என் அண்ணன் கர்ணனை நானே கொலை செய்து விட்டேனே..." என்று
அர்ஜுனன் கதறும்போது கிருஷ்ணன் சொன்னானாம்.... "உனக்கு முன்பே அவனை
பத்துபேர் கொன்றுவிட்டார்கள்... நீ அம்பெய்தது வெற்றுடலின் மீதுதான்.."
என்று... அதாவது கர்ணனின் சாவுக்கு காரணமானவர்கள் அர்ஜுனனுக்கு முன்னாலேயே
பத்து பேர்... குந்தி, பரசுராமன், கிருஷ்ணன் என்பதே நீளும் அந்த
பட்டியல்...
என் நட்பு வட்ட்டத்தில் இல்லாத சில பெண்கள் என்னை "பெண் சுதந்திரத்திற்கு எதிரானவன்... ஆணாதிக்கவாதி..." என்றெல்லாம் சொல்லித்திரிகிறார்களாம்...
கரைகளின் மீது கோபம் கொள்ளும் எந்த ஆறும் கடலையும் சேர முடியாது.... யாருக்கும் பயனளிக்கவும் முடியாது...
கரைகளின் மீது கோபம் கொள்ளும் எந்த ஆறும் கடலையும் சேர முடியாது.... யாருக்கும் பயனளிக்கவும் முடியாது...
எனக்கு முன்பே உங்கள் பிரதிநிதிகள்தான் உங்களை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்...
ஓரிரண்டு மட்டும் உங்கள் சிந்தனைக்கு.. (சிந்திக்கத்தெரிந்தால் நீங்கள் என்னைப்பற்றி அவதூறு பரப்ப மாட்டீர்கள் என்பது வேறு விஷயம்..)
தன் மகள் வாழ்க்கைப்பட்டு போன இடத்தில் "மகாராணி"யாகவும்.... தன் மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த மருமகள் "கொத்தடிமை"யாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற பெண்ணும்....
தன்னை பெற்ற பெண் "தேவலோக"த்தில் இருந்து பிறந்ததாகவும்.... தன கணவனை பெற்றெடுத்தவள் "சாக்கடை"யில் இருந்து உருவான புழுவாகவும் நினைக்கின்ற பெண்ணும்தான்....
பெண் சுதந்திரத்தின் முதல் எதிரி...
ஏன் பெண்ணேதான் வாழ்க்கைப்பட்டு போக வேண்டுமா... ஆண் வாழ்க்கைப்பட்டு பெண் வீட்டுக்கு வரக்கூடாதா என அதிரூப , அதிவிவேக சுந்தரிகள் அவசரக்கேள்வி எழுப்பலாம்...
கணவன் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன பெண்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் மகாராணிகளாக வாழ்கிறார்கள்.... மனைவி வீட்டோடு வந்த கணவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் "கணவன்" என்ற பெயரை மட்டும் சுமந்து "மற்ற"எல்லாவற்றையும் இழந்துதான் வாழ்கிறார்கள்
ஆகவே... மேற்சொன்ன கேள்விகளை எழுப்பிய அதிரூப, அதிவிவேக சுந்தரிகள் பெண் சுதந்திரத்தின் இரண்டாவது எதிரி...
........... நீள்கிறது பட்டியல்...!!!
........... நீள்கிறது பட்டியல்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக