வியாழன், 29 ஜூன், 2017

நீங்களும் ஆகலாம் "கலாம்"Image may contain: 1 person
திரு அப்துல் கலாம் அவர்கள் ஒரு விழாவில் கலந்துகொண்ட போது பலர் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம்.... எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட "கலாம்" கடைசியாக அந்த போட்டோகிராபரை அழைத்து, வேறொருவரிடம் கேமராவை கொடுத்து புகைப்படம் எடுக்க சொன்னாராம்...

எல்லோருக்கும் இருக்கிறமாதிரி அவருக்கும் ஆசை இருக்கும் தானே.... என்பது அவரின் எண்ணம்....


நமது வீடுகளில் திருமண-விசேஷ வைபவங்கள் நடக்கும் புகைப்பட-வீடியோ ஆல்பங்களில் மேளக்காரர், சமையல்காரர் உள்ளிட்டவர்களின் முகம் கூட எங்காவது ஒரு இடத்தில் வரும்... ஆனால் அவற்றை எல்லாம் பதிவு செய்த புகைப்பட கலைஞர்கள் யாரும் பதிவாகி இருக்க மாட்டார்கள்...நம்ம வீட்டு திருமணங்களில் கடைசியாக அந்த புகைப்பட கலைஞரையும் அழைத்து நம்முடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சொல்லலாமே...

அப்துல் கலாம் ஆக... நீங்கள் ராக்கெட் விஞ்ஞானி ஆக வேண்டாம்.... இம்மாதிரியான அவருக்குள் இருந்த "மனிதத்தை" தத்தெடுத்தாலே போதும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக