புதன், 28 ஜூன், 2017

கடமையை செய்ய பரிசு



No automatic alt text available.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் ஷாப்பிங் ட்ராலிகள் வைத்திருப்பார்கள்... அதனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வேலை முடிந்ததும் அந்த ட்ராலிகளை எடுத்த இடத்தில் கொண்டுவந்து விடாமல் ஆங்காங்கே விட்டு விட்டு செல்வார்கள்...

துபாயில் , இதனை தடுக்க நினைத்த ஒரு தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிர்வாகம் அந்த ட்ராலிகளை ஒன்றோடோன்றாக ஒரு வித சங்கிலி இணைப்பு மூலம் சேர்த்து பூட்டி வைத்தது.. குறிப்பிட்டிருக்கும் இடத்தில் ஒரு திராம் நாணயத்தை வைத்தால் அந்த காயின் உள்ளே சென்று பூட்டை திறக்கும்... வேலை முடிந்த உடன் மீண்டும் அந்த ட்ராலியை கொண்டுவந்து இன்னொரு ட்ராலியுடன் இணைத்தால் அதன் உள்ளே இருக்கும் அந்த ஒரு திராம் நாணயம் வெளியே வந்து விடும்...

நீங்கள் ட்ராலியை எடுக்கும்போது வைத்த ஒரு திராம் நாணயம் உங்களுக்கு திரும்ப வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் ட்ராலியை வேறொரு ட்ராலியுடன் சேர்த்து இணைத்தே ஆக வேண்டும்...

அந்த ட்ராலியை வேறு எங்கோ விட்டுச்சென்றால் அதனை சரியான இடத்தில் எடுத்துச்சென்று விடுபவருக்கு அந்த ஒரு திராம் நாணயம் கிடைக்கும்...

அகமதாபாத் நகர நிர்வாகம் அப்படியான ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது... பொதுக்கழிப்பிடங்களை உபயோகிப்பவர்களுக்கு அரசாங்கம் ஒரு ரூபாய் கொடுக்கும்... ஒரு முறை உபயோகித்தால் ஒரு ரூபாய்... இதனால் பேருந்து /ரெயில் நிலையங்கள் மற்றும் பல பொது இடங்களில் இருக்கும் கழிப்பறைகளை மக்கள் உபயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனக்குத்தெரிந்தவரை இது ஒரு நல்ல திட்டம்.... 

இது முழுமையான வெற்றியை கொடுக்கா விட்டாலும் எழுபது சதவிகித வெற்றியை தந்தது உண்மை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக