வியாழன், 29 ஜூன், 2017

விலங்கு ஆர்வலர்கள்




கொளுத்தும் கோடையில் சும்மா இருந்துவிட்டு அடைமழை காலத்தில் "நீராதாரங்களை தூர்வாராததே வெள்ள சேதத்திற்கு காரணம்" என்று அறிக்கை விடுவதும் போராட்டம் நடத்துவதும்.....




ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகளை கொடுமை செய்கிறார்கள்.. அதனால் அந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து "இனிமேல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கூடாது" என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.... விலங்குகள் நல ஆர்வலர்கள்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்றாலும் வழக்கம் போல எதையும் செய்ய முடியாத சாமான்யனாய் சில சந்தேகங்கள் வரத்தான் செய்கிறது....

1) இந்த வழக்கை தொடுத்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோருமே நூறு சதவிகித சைவ உணவு உண்பவர்களா???

2) அப்படியே அவர்கள் சைவ உணவு உண்பதே வைத்துக்கொண்டாலும் மாடுகள் உழவு செய்யாமல் , பாரவண்டி இழுக்காமல் தான் அந்த உணவு பொருட்கள் இவர்களை வந்தடைகிறதா ???(மாடுகளை காயடித்து அதன் சந்ததி பெருக்கத்தையே நிறுத்தினால் மட்டுமே அதை உழவுத்தொழிலிலோ, பார வண்டி இழுக்கவோ பயன்படுத்த முடியும்.. காயடிபதை விடவா ஒரு பெருங்கொடுமை உண்டு..??????)

3) ஜல்லிக்க்கட்டு காளைகளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விட்டு அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்குள்ளாக அது பட்டியை விட்டு வெளியே போய் விடும்... இந்த பத்து நிமிடத்தில் அதனை பிடிக்க பத்து பதினைந்துபேர் முயல்வார்களே,,, அவர்களில் யாரும் கட்டை, கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் அந்த மாடுகளை கொடுமை படுத்துகிறார்களா????

4) ஜல்லிக்கட்டுக்களுக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு போஷாக்காக கொடுக்கப்படும் தீவனங்கள், கவனிப்புகள் அந்த மாடுகள் அந்த போட்டிகளுக்காக இல்லை என்றால் கூட கிடைக்கும் என்று அந்த வழக்குத்தொடுத்தவர்களால் உறுதியளிக்க முடியுமா????

5) காயடிக்காத மாடுகளை மற்ற தொழில்களில் ஈடுபடுத்த முடியாது ( பசுமாடுகளை சினைப்படுத்தும் வேலையை தவிர) இவ்வளவுகாலம் ஜல்லிக்கட்டுக்கென காயடிக்காமல் வளர்த்து கொழு கொழு என்று இருக்கும் மாடுகள், இனிமே அந்த போட்டிகளுக்கு உதவாதென்றால் அதனை வளர்த்தவர்கள் விற்பனை செய்ய தான் முயல்வார்கள்... அப்படி விற்பனையாகும் மாடுகளை வாங்குபவர்கள் கறிக்காக அதனை வெட்டுவார்கள்... ஆக.. பத்து பதினைந்து இளைஞர்கள் அதனை மடக்குவதை கொடுமை என்று சொன்ன அந்த ஆர்வல புடுங்கிகள் அந்த மாடுகளின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?????

கடைசியா ஒரு சாமான்யனா எங்கூர் பக்கம் சொல்ற ஒரு சொல்வழக்கோடு என் சந்தேகங்களை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்...

"மேயிற மாட்ட கெடுத்துச்சாம் நக்குற மாடு..."


குறுவை-சம்பா விவசாயம் தொடங்கும் காலங்களில் மட்டும் காவிரி பிரச்சினைக்கு ஆக்ரோஷமாய் குரல் கொடுப்பதும்...
Image may contain: one or more people, outdoor and nature
தனி மனிதனாய் கதறி கதறி உண்ணாவிரதம் இருந்தபோது கண்டுகொள்ளாமல், செல்போன் டவரில் ஏறி (தவறி விழுந்து/தற்கொலை செய்து) மரணமடைந்த சசி பெருமாள் பிணத்தை வைத்து அரசியல் செய்ததும்....

நமக்கு வாய்த்த அரசியல் கோமாளிகளின் சந்தர்ப்ப நாடகங்கள்... அந்த வரிசையில் இப்போது பொங்கல் நெருங்கும் வேளையில் மட்டும் "ஜல்லிக்கட்டு" சலசலப்பு....

இந்த ஜல்லிக்கட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களின் ஒரு விலங்குகள் நல ஆர்வலர்(??) பெண்மணி, ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பங்குபெற்றபோது "உங்களால் குதிரை பந்தயத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா..." என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறி தலை குனிந்து பிறகு "அதெல்லாம் எனக்கு தெரியாது சார்.." என்று சமாளித்தார்...

முதலில் விலங்குகள் மீதான கொடுமை எது என்று எந்த அடிப்படை அறிவும் இல்லாமல், நிஜமாய் துன்புறுத்தப்படும் விலங்குகள் எது என்றே தெரியாமல் "ஜல்லிக்கட்டிற்கு" எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார் இவர்... இப்போதுதான் இதன் பின்னணியில் வழக்கம் போல ஏதோ ஒரு கார்பொரேட் கை இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது...
ஆனால் ஆதாயம் இல்லாமல் ஆற்றை கட்டி இறைக்க கார்போரேட்டுகள் சம்மதிக்காதே..... ஜல்லிக்கட்டை தடை செய்வதில் என்ன ஆதாயம் இருக்கிறது என்று ஒரு சாமான்யனின் புத்திக்கு புலப்படவில்லை..

கார்பொரேட் களவாணித்தனம் புரியாத சாமான்யனுக்கு ஒரே ஒரு கவலை... விதைப்பை நசுக்கப்பட்டு கூடலுக்கு உதவாத மாடுகளே விவசாய வேலைகளுக்கு பயன் படும்... கன்று வளர்ந்து சற்றே இளமை பருவம் எட்டிப்பார்க்கும் நேரத்திலேயே விதைப்பை நசுக்கப்பட வேண்டும்..
அப்போதுதான் அதனை வேலைகளுக்கு பயன்படுத்த முடியும்... இப்போது விலங்குகள் நல ஆர்வலர்கள் "கொடுமை படுத்துகிறார்கள்" என்று பாதுகாக்க போகிறார்களே... ஜல்லிக்கட்டு காளைகள்...... அவைகள் எல்லாம் நன்கு தின்று, சிறப்பு வளர்ப்பில், கவனிப்பில் கொழுத்திருப்பவை..... அவை எக்காலத்திலும் விவசாய வேலைகளுக்கு பயன்படாது..... அப்படியானால்.. இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்... இல்லை என்றால் இறைச்சிக்கு தான் பயன் படும்...


நன்கு உண்டு வளர்ந்த காளைகளை கொன்று தின்ன ஒரு கூட்டம் வரும் போது, இந்த விலங்குகள் நல ஆர்வலர்களும் "எனக்கு ஒரு கிலோ" என்று பையை நீட்டுவார்களா...?? இல்லை.... இனப்பெருக்கம் செய்ய காளை வேண்டுமா.. என்று அந்த காளைகளுடன் ஊர் ஊராக பசுவை தேடி திரியப்போகிறார்களா...??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக