வியாழன், 29 ஜூன், 2017

பொருளாதார விவசாயி- நரேந்திர தாஸ் மோடி


நிலக்கடலை விதைப்பு முடிந்து அந்த ஈரம் காய்வதற்குள் தண்ணீர் இறைக்க வேண்டும்... அப்படியே வாய்க்கால் மடையை திருப்பி விட்டு தண்ணீர் பாய்ச்ச கூடாது.... வயலின் ஊடாக சிறிய சிறிய வாய்க்காலாக உண்டாக்கி அதன் வழியே தண்ணீர் விட்டு ஒரு தட்டு வைத்து இறைத்து தெளிக்க வேண்டும்... மொத்தமாக தண்ணீர் பாய விட்டால் முளைத்து வரும் கன்றுகள் அழுகி விடும்... இந்த முறைக்கு எங்கள் பகுதியில் "ஓட்டு தண்ணி எறைக்கிறது" என்று வழக்கு மொழியில் சொல்வார்கள்..

Image may contain: one or more people, outdoor and nature

அதற்காக விதைப்பு முடிந்த மூன்றாம் நாள் கிளைவாய்க்கால்களை உண்டாக்குவோம்... அப்படி உண்டாக்கி முடித்ததும் "வாய்க்கால்கள் நன்றாக அணைத்து விட்டோம்... வரப்புகள் உயர்த்தி கட்டி அணைத்துவிட்டோம்.... தண்ணீரை திறந்து விட்டதும் வாய்காலின் வழியாக ஓடி வரும்... நிதானமாக இறைக்கலாம்" என்று நினைப்போம்...


ஆனால்... அதில் தண்ணீர் திறந்து விடும்போதுதான் தெரியும்.... நாம் அணைத்து வைத்திருந்த வாய்க்காலின் கரைகள் நூற்றுக்கணக்கான இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தறிகெட்டு பாயும்...


அப்புறம் ஓடி ஓடி மண்வெட்டியாலும், கைகளாலும் மண்ணை அனைத்து மொத்த தண்ணீரையும் வாய்க்கால் வழி ஓட செய்வதற்குள் பெரும் பாடு பட வேண்டி இருக்கும்... ஆனாலும் விவசாயி சளைத்து போய் உடைப்புகளை சரி செய்யாமல் விட மாட்டான்.... அவனுக்கு முளைத்து வரும் பயிர் குருத்துக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதனால் தன்னுடைய களைப்பை பொருட்படுத்தாமல்... வாய்கால்களை சரி செய்யும் வேலையை செவ்வனே செய்து முடிப்பான்..


அப்படித்தான் இந்த கருப்பு பண விவகாரமும்.... பல்வேறு திட்டமிடல்களுடன் ... எல்லாம் தயார்.... இந்திய மக்களையும் பொருளாதாராத்தையும் காப்பாற்றும் வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்துதான் 1000/500 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் மோடி...


அப்போது நன்றாக தெரிந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டதும் ஏற்பட்ட உடைப்புகளை போல.... ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் அதிலுள்ள நடை முறை சிக்கல்கள் தெரிய வருகின்றன...

உடைப்புகள் அதிகமாகிவிட்டதே... என்பதற்காக விவசாயி அப்படியே விட மாட்டான்.... பயிர்களை காக்கும் பொறுப்பு அவனுக்கு இருப்பது போல.... மோடிக்கு நாட்டை காக்கும் பொறுப்பு இருப்பதால்... விரைவில் அனைத்து உடைப்புகளும் சீராக்கப்பட்டு .... பயிர்களுக்கு தேவையான அளவில் தண்ணீர் தெளிக்கப்படுவதை போல... நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதாரமும் சீராகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக