வியாழன், 29 ஜூன், 2017

ஓரிரவில் பஞ்சம்- எப்படி??

ஒரு சாமானியனின் சில நினைவுகளும் கேள்விகளும்...
No automatic alt text available.
பசுமை புரட்சி வருவதற்கு முன்பு ஏற்பட்ட உணவு பஞ்சத்தில் "உணவுப்பொருட்களை பதுக்குவோர்" மீது கடுமையான அரசு சட்டங்கள் பாய்ந்தது...

எங்கள் பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் தங்கள் வியர்வையில் விளைந்த தானியங்களை குதிர், சேரு, பத்தாயம், கூன், கோட்டை போன்ற சேமிப்புக்கலங்களில் சேமித்து வைத்து தங்களின் சொந்த உபயோகத்திற்கும், அவ்வப்போது ஏற்படும் பணத்தேவைகளுக்கு விற்று கொள்வதற்குமாய் வைத்திருப்பார்கள்...

ஒரு வருட உணவுத்தேவைக்கும், பணத்தேவைக்குமாய் போதுமான கையிருப்பு வைத்திருப்பார்கள்.. அந்த சமயத்தில் வானம் பொய்த்துப்போய் மழையற்று உணவுப்பஞ்சம் வர, அரசு அதிகாரிகள் அந்த விவசாயிகளின் வீடு வீடாய் சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த நெல்-தானியங்களை கைப்பற்றி சென்றார்கள்.... எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களை "உணவு பதுக்கல் " சட்டத்தை காட்டி பயமுறுத்தினார்கள் .

ஆனால் உள்ளபடியே, அவனது நிலத்தில் விளைந்த தானியங்களை சேமித்த அந்த அப்பாவி விவசாயிகளுக்கு "உணவு பதுக்கல்" சட்டமும் தெரியாது.... லாப நோக்கத்தை குறிவைத்து பதுக்கவும் இல்லை.....

இன்றைய காலகட்டத்தில் பருப்பு விலை திடீ....................ரென உயர்கிறது.... பஞ்ச காலம் என்பது தொடர்ந்து சில-பல வருடங்கள் மழை இல்லாமல் போனாலோ...., திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைந்தவை கை சேரும் முன்பே அழிந்தாலோ, அல்லது ஏதேனும் திடீரென நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் விளையாமல் போனாலோ ஏற்படுவது....

ஆனால் இந்த பருப்பு பஞ்சமோ (விலையேற்றமோ) ஓவர் நைட்டில் ஏற்படுகிறது.... எப்படி??


உணவு பதுக்கல் சட்டம் , ஓவர் நைட்டில் பருப்பு பஞ்சம் ஏற்படுத்தியவர்கள் மீது எல்லாம் பாயாதா??? அவர்களின் ரோமங்கள் என்ன முள்ளம்பன்றி போல இருக்கிறதா?? அதை பிடுங்க சென்றால் குத்தி கிழித்து விடுமா??

அரசு சட்டங்களும், விதிகளும், நிபந்தனைகளும் அப்பாவிகளின் கோவணத்தை மட்டும் தான் குறி வைக்குமா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக