இந்திய தேசத்தின் நாசகார சக்திகள் என்று யாரை யாரை குறிப்பிடலாம்...??
RSS காரர்களை கேட்டால்.... இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்வார்கள்..
இஸ்லாமியர்களை கேட்டால்... RSS/காவி தீவிரவாதிகள் என்று சொல்வார்கள்..
பொது பார்வையாளரை கேட்டால்... வெளிநாட்டு தீவிரவாதிகள் என்று பொதுவாக சொல்வார்கள்...
கம்யூனிஸ்ட்கேட்டால்...
மாபெருமளவில் அண்ணிய முதலீட்டை கொட்டி உள்ளூர் தொழில்களை நசுக்கும்
கார்பொரேட் கம்பெனிகள் என்றும், உள்ளூரிலேயே வளர்ந்து விட்ட பெருவணிக
நிறுவன பண முதலைகள் என்றும் சொல்வார்கள்..
பொருளாதார நிபுணர்களை கேட்டால்.... உலகமயமாக்களில் பெருவிட்ட ஆன்-லைன் வர்த்தகம் என்று சொல்வார்கள்..
திமுக தொண்டர்களை கேட்டால்.. அதிமுக என்றும். அதிமுக வை கேட்டால் திமுக என்றும்... காங்கிரஸ்-பிஜேபி போன்ற கட்சி சார்ந்தவர்கள் பரஸ்பரம் இவர்களை அவர்களும், அவர்களை இவர்களும் சொல்வார்கள்..
உயர் ஜாதிக்காரர்களை கேட்டால் இடஒதுக்கீடு பெற்று திறமையில்லாமல் பதவிகளுக்கு வரும் கீழ்சாதிக்காரர்கள் என்று சொல்வார்கள்...
கீழ்சாதிக்காரர்களை கேட்டால் வெறும் இரண்டு சதவிகிதம் இருந்துகொண்டு எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சாதிக்காரர்கள் என்று சொல்வார்கள்...
இப்படி
எல்லோரும் மாற்றி மாற்றி "இந்த தேசத்தின் நாசகார சக்திகள்" என்று யார்
யாரையோ கை காட்ட.... ஆனால்.. நிஜமான நாசகார சக்தி யார் தெரியுமா???
நாமெல்லாம் "ஜனநாயகத்தின் நான்காவது தூண்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே..
ஆம்....அவர்கள் தான் மற்ற எல்லாம் விட அதிக நாசம் விளைவித்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிவைத்து எங்கோ ஒரு மூலையில் நடக்கும் எதோ ஒரு முட்டாள்த்தனமான சம்பவங்களை ஊதி ஊதி பெரிதாக்கி வதந்திகளையும், ஜாதி-மத-இன துவேஷங்களை பரப்பி ஒருவரோடு ஒருவர் எந்த காலத்திலும் இணையவே முடியாதபடி வன்மம் வளர்த்து இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாய் இருப்பவர்கள்...
எங்கோ ஒரு முட்டாள் "மாட்டுக்கறி தின்பவன் கழுத்தை வெட்டுவேன்" என்று சொன்னால்... அதை ஏதோ ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்று ஒதுக்கினால்... அந்த செய்தி அவன் சொன்ன இடத்திற்குள்ளாகவே செயலற்று போய் இருக்கும்...
எங்கோ ஒரு அறிவில்லாதவன் பெண்கள் ஜீன்ஸ் அணிந்ததால் தான் பூகம்பம் வந்தது என்று உளறினால்.... அதை ஒரு பித்துக்குளியின் பிதற்றல் என்று ஒதுக்கினால் அதை பற்றி யாருக்குமே தெரியாமல் போய் இருந்திருக்கும்...
ஆனால்.... எரிகிற தீயில் எண்ணையை ஊற்றும் விதமாக.. தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இம்மாதிரியான செயல்களுக்கு எவனையாவது கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து சொல்ல வைப்பதும், சம்மந்தப்பட்டதை நேரலை ஒளிபரப்பு என்று கூடுதலாய் எரிய தூண்டிவிடுவதும்தான் இப்போதைய ஊடகங்களின் "சென்சேஷனல்" ராஜ தந்திரம்...
எவன்
எங்கே எரிந்தால் என்ன... எவன் எங்கே புதைந்தால் என்ன... எனக்கு தேவை
பரபரப்பு... எனக்கு தேவை பணம்.. என்ற ஒரே குறிக்கோளை மட்டுமே தாரக
மந்திரமாக கொண்டு பிழைக்கும் இந்த விபச்சார ஊடகங்களுக்கு ஏன் நாட்டின்
வளர்ச்சிக்கான,, ஒற்றுமைக்கான செய்திகள் கண்களில் படாமல் போகிறது...
"பத்திரிக்கை தர்மங்க"ளை எல்லாம் பரணில் ஏற்றிவிட்டு போர்க்களத்தில் இரத்தம் குடிக்க அலையும் நரிகளாக காமிராவுடன், மைக்குடன் திரியும் இந்த ரத்தக்காட்டேரிகளை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் "ஜனநாகயத்தின் நான்காவது தூண்" என்று நம்பிக்கொண்டிக்க போகிறோம்...??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக