செல்போன்
நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சேவையை விரிவாக்க கிராம
புறங்களில் எல்லாம் அலைக்கற்றை கோபுரங்களை அமைத்தார்கள்...
அந்த
கோபுரங்கள் அமைப்பதற்கு அதிகபட்சம் 5 அல்லது 10 சென்ட் நிலம் போதுமானதாக
இருந்தது.... நெரிசலற்ற கிராம புறங்களில் வீடு கட்டிய, வைக்கோல் போர்,
குப்பை, விறகு அடுக்கி வைக்க, ஆடு-மாடு கட்ட என உபயோகத்திற்கான இடம்
போக நிறைய காலி இடங்கள் இருக்கும்...
அம்மாதிரி இடங்களின் உரிமையாளரை அணுகிய செல்போன் நிறுவனங்கள் அந்த இடத்தில் தங்களின் அலைக்கற்றை கோபுரங்கள் அமைத்துக்கொல்வதாகவும் அதற்காக மாத வாடகையாக ரூபாய் ஐந்தாயிரம் வரையில் தருவதாகவும் தூண்டில் போட....
சும்மா
கிடக்கிற இடத்துக்கு அஞ்சாயிரம் தரேங்கிறான்.... தாராளமா போட்டுக்கப்பா
என்று பல்லை இளித்தார்கள்... அதனை கேள்விப்பட்ட அண்டை
அயலாரோ..."ங்கொய்யால.. இவனுக்கு அடிச்ச யோகத்த பாருடா.... காலியா கெடந்த
எடத்துக்கு மாசம் அஞ்சாயிரம் சொளையா வாடகை வாங்குறான்..." என்று
வயிறெரிந்தார்கள்...
ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகள்... செல்போன் அலைகற்றை கோபுரங்கள் அருகில் குடியிருப்பவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர், ஆண்மை குறைவு, மாரடைப்பு, கர்ப்பப்பை பிரச்சினைகள்... போன்ற உயிர் கொல்லும், தலைமுறை கொல்லும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு ஆயிரம் மடங்கு அதிகமாம்...
அஞ்சாயிரம் கொடுகிறேன்னு அக்ரீமென்ட் போட்டானுங்க இல்ல.... அதுல விலாவாரியா எழுதி இருப்பான்.... இன்னும் இருபது-அம்பது வருஷத்துக்கு எங்க தலைமுறையே அழிஞ்சாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல... எல்லாத்துக்கும் எங்களுக்கு சம்மதம் தான் ன்னு .... அஞ்சாயிரத்துக்கு ஆசை பட்டு நீட்டின எடத்துல எல்லாம் கையெழுத்தும் போட்டு உயிரையும்-ஆரோக்கியத்தையும்
இப்போ அவன ஒண்ணுமே பண்ண முடியாது...
எவன் எத கொடுத்தாலும் இளிச்சுக்கிட்டு வாங்குறீங்க இல்ல.... கொஞ்சம் யோசிங்க... ஒரு பயலும் சும்மா கொடுக்க மாட்டான்.... உங்களுக்கு அஞ்சாயிரம் வாடகை கொடுத்துட்டு அவன் மாசம் அம்பது லட்சம் சம்பாதிச்சுடுவான்...
எவன் எத கொடுத்தாலும் இளிச்சுக்கிட்டு வாங்குறீங்க இல்ல.... கொஞ்சம் யோசிங்க... ஒரு பயலும் சும்மா கொடுக்க மாட்டான்.... உங்களுக்கு அஞ்சாயிரம் வாடகை கொடுத்துட்டு அவன் மாசம் அம்பது லட்சம் சம்பாதிச்சுடுவான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக