கருணாநிதி....
தமிழக வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத பெயர்... இருபதாம் நூற்றாண்டில் எல்லாவிதத்திலும் இந்த மனிதரை நினைத்து நான் வியக்காத நாளே இல்லை என்றால் அது மிகையாகாது...
தந்திரத்திற்காக பயன்படுத்திக்கொண்டாலும் கூட இவரின் தமிழ் தொண்டு அளவிட முடியாதது... இவரின் வர்ணனைகளில் மயங்கி இருக்கிறேன்.... இவரின் கற்பனை திறனில் களித்திருக்கிறேன்... இவரின் போர்க்கள கவிதைகளில் புறநானூறையும் கலிங்கத்துப்பரணியையும் கண்டிருக்கிறேன்... அரசியலில் இவரின் சதுரங்க நகர்த்தல்களில் மிரண்டிருக்கிறேன்.... இவர் மீது அபிமானம் கொண்டிருக்கும் எல்லோரையும் போலவே "கலைஞர்" என்று குறிப்பிடுவதையே நானும் வழக்கமாய் கொண்டிருந்திருக்கிறேன்...
இருபத்தோராம் நூற்றாண்டு ஏன் இப்படி இவரை மாற்றிப்போட்டது என்பதுதான் வியப்பு.... சற்றேறக்குறைய முக்கால் அரை நூற்றாண்டுகாலம் எத்தனையோ பெருந்தலைகளுடன் சமர் செய்த இவர்... இருபத்தோராம் நூற்றாண்டில் ஏனோ குஷ்பு போன்றவர்கள் "தலிவர்" என்பதை ரசிக்க தொடங்கி அவர்களை எல்லாம் மேடையேற்றி தமக்கு சமமாய் அமர வைத்தது யார் குற்றம்...??
பதவி மீது இருந்த மோகம்.. பதவி மீது இருந்த காதல்... பதவி மீது இருந்த ஆசை அவரை தமிழை ஆயுதமாக்கி, தமிழையே கேடயமாக்கி போரிட வைத்தது.... அந்த போரில் ஒரு நியாயம் இருந்தது.....
அந்த மோகமும்-காதலும்-ஆசையும் "வெறி"யாய் உருமாறி இன்று தள்ளாத.... சக்கர நாற்காலில் வைத்து தள்ளும் வயதிலும் அரச கட்டிலை மட்டுமே சிந்தித்துக்கிடக்கிறது....
தமிழை ஆயுதாக்கியும் கேடயமாக்கியும் போராடியவர்... இன்று சினிமா கவர்ச்சியை
முன்னிறுத்தி நாலாந்தர போரில் நான்தான் கதாநாயகன் என்று
சொல்லிக்கொள்கிறார்..
தனக்கான மரியாதை இங்கே கிடைக்காது என்று தெரிந்தால்.. நானே அந்த இடத்தில் நிற்க விரும்ப மாட்டேன்.... மரியாதை தெரியாதவர்கள் இருக்கும் கூட்டத்தில் எக்காரணத்திற்காகவும் நான் என்னை நிலைபடுத்த விரும்பவே மாட்டேன்... நகர்ந்து விடுவேன்.... ஒரு சாமான்யனான எனக்கு இருக்கும் இந்த சுயமரியாதை கூட இல்லாமல் இந்த "பதவி வெறி" இவரை எப்படி மாற்றிவிட்டது????
இப்போதும் கூட... எப்போதும் வியக்க வைக்கும் எத்தனையோ விஷயங்கள் இவரிடம் கொட்டிக்கிடந்தாலும் குடம் பாலில் துளி விஷம் போல... இந்த பதவி"வெறி" எல்லாவற்றையும் சேர்த்தே வெறுக்க வைக்கிறது...
அதனால்தான் இருபத்தோராம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் கூட இவரை "கட்டுமரம்" என்று கேலி செய்யும் சோதனைக்காலம் நடக்கிறது...
இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப்போய் விட வில்லை..... வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம்... தன மகனை முன்னிறுத்தி, ஆலோசனைகள் கூறி, வழிநடத்தும் "ராஜபிதா"வாக வலம் வரலாம்.... எனக்கு தெரிந்தவரை தந்தையை சிறையிடைத்து அரியணைக்கு ஆசைப்படும் மகனல்ல அவர்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக