புதன், 28 ஜூன், 2017

நீ தமிழனாக இருந்தால்...




"இந்த வெப்சைட்டில் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.... நம் தொப்புள் கொடி உறவு இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க செய்யுங்கள்.... ஒரு மில்லியன் வாக்குகள்... இன்னும் இரண்டரை லட்சம் வாக்குகள் தேவை.... இதை உடனே பகிருங்கள்...."

இப்படியான ஒரு வேண்டுகோள்... இல்லை இல்லை... கட்டளை சில காலமாக பேஸ்புக்கில் சுற்றி வருகிறது....(வந்தது)
Image may contain: one or more people, people standing and outdoor
அந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு சில கேள்விகள்...

* இந்த வலைத்தளத்தை வடிவமைத்தது யார்??

* இது ஐ நா வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமா? இல்லை.. ஐ நா வின் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா???

*இதை உங்களுக்கு சொன்னது யார்? நண்பர்..? அவருக்கு அவருடைய நண்பர்.. அவருக்கு அவருடைய நண்பர்.... பேஸ்புக் கில் பார்த்தேன்.... நானும் வாக்களித்து பகிரவும் செய்தேன்.... இதுதானே உங்கள் பதில்..???


அட முட்டாள்களே.... நீங்கள் ஏனடா சிந்திக்கும் திறனை அறவே இழந்து தவிக்கிறீர்கள்...??


இலங்கை என்பது ஒன்றும் மாய லோகமல்ல... நடந்த உள்நாட்டு உத்தம் ஒன்றும் ரகசியமாய் நடக்கவில்லை.... கொத்து கொத்தாய் இறந்த பயன்கள் கிடந்தபோது, அந்த பிணங்களின் உறவுகள் உயிரோடு நடைபிணமாய் நடமாடுகையில் அவர்களை சந்தித்து நியாயம் வழங்காத ஐ நா உங்கள் ஆன்-லைன் வாக்குகளை பார்த்துதான் நியாயம் வழங்க போகிறதா??


இதில் உச்சபட்ச நகைச்சுவை இந்த வலைத்தளத்தில் வாக்களிகாதவன் தமிழனே இல்லை... ரோஷம் இல்லை என்றெல்லாம் உசுப்புகிறீர்களே.... அதாவது உங்களைப்போல முட்டாளாக இல்லாதவன் தமிழன் இல்லையா என்ன??

தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இப்படி இலங்கை தமிழர்களின் இன்னலை பயன் படுத்தி கருணாநிதி, ஜெயலலிதா முதல் முந்தாநாள் கட்சி ஆரம்பித்த சீமான் வேல்முருகன் வரை அவர்களை மீண்டும் மீண்டும் கொன்றுகொண்டே இருக்கிறார்கள்...

கேவலம் லைக் வாங்கவும் கூட அந்த தமிழர்களின் விளிம்புநிலை சோகத்தை நீயும் பயன்படுத்துகிறாயே.... உனக்கு வெட்கமே இல்லையா??? அந்த அரசியல் விபச்சாரிகளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்????


எதெற்கெடுத்தாலும் நீ இதை செய்யவில்லை என்றால் தமிழனே இல்லை சொல்ல ஆரம்பித்திருகிறார்கள்... எனக்கு ஒட்டுப்போடாதவன் தமிழனே இல்லை என்றானே சீமான்... அதை விட இது கேவலமில்லையா?? நாளை ஒரு விபச்சாரி அறிக்கை விடுவாள்.... நீயும் விபச்சாரம் செய்.... இல்லை என்றால் நீ தமிழச்சியே இல்லை.... என்று....


நாளை ஒரு கொள்ளைக்காரன் அறிக்கை விடுவான்... நீயும் கொள்ளையடி... இல்லை என்றால் நீ தமிழனே இல்லை என்று.... "தமிழன்" என்ற வார்த்தையை பார்த்தாலேதான் நீ உணர்ச்சிவசப்பட்டு விடுவாயே.... வெட்கம்கெட்டு அதையும் ஷேர் செய்து உன்னை தமிழன் என்று அடையாளப்படுத்த முயற்சிப்பாய்....

நீயும் நானும் தமிழன் என்று அடையாளம் காட்ட எவனோ வர வேண்டுமா என்ன???? இங்கே ஆரம்பிக்கிறது உன் தோல்வி....

கடைசி குறிப்பு:- தொப்புள் கொடி உறவு என்றால் அது தாயோடு மட்டும் தான்... தந்தையே கூட தொப்புள்கொடி உறவு அல்ல... மானே-தேனே-மயிலே-குயிலே என்று காதலியை வர்ணிக்கும் கவிதை மாதிரியான ஒரு வர்ணனை வார்த்தைதான் தொப்புள்கொடி உறவு என்பதும்....

சமீபத்திய செய்தி:- அந்த வலைத்தளம் முடக்கப்பட்டு விட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக