வியாழன், 29 ஜூன், 2017

உடனடி தண்டனை

Image may contain: food and indoor

ஒரு ஆஃபாயில் போடலாம்னு அடுப்புல ப்ரை பேன் வச்சு எண்ணெய் ஊத்தினப்புரம் தான் தெரிந்துது... "உப்பு" நேத்தே தீர்ந்து போன விஷயம்... வாங்கிட்டுவர மறந்துட்டேன்

சரி... உப்பு போட்டா மட்டும் நமக்கு சுரணை வந்திடவா போகுதுன்னு உப்பு இல்லாமையே ஆஃபாயில் போடறதா முடிவு பண்ணி முட்டை உடைச்சு ஊத்தியாச்சு...


அப்புறம் திரும்பி பார்த்தா இன்னொரு கப்போர்டுல யாரோ ஒரு உப்பு டப்பா வச்சிருந்தாங்க... அட.... இதோ இருக்கே.. கொஞ்சம் உப்பு போட்டு சொரணை வர தொடர்ந்து முயற்சிக்கலாம்னு அந்த உப்பு டப்பாவ திருடினேன்.. ( உடமையாளரை கேக்காம எடுத்தா து திருட்டுதான்)



சின்ன சின்னதா ஹோல்ஸ் இருக்க பக்கம் திருப்பி.. தலைகீழா புடிச்சு அந்த ஆஃபாயில் மேல தூவ முயற்சி பண்ணும் போது மூடி திறந்து... மொத்த உப்பும் முட்டை மேலேயே கொட்டிட்டுது...


ம்க்கூம்.... நாம உப்பு திருடினா கூட உடனே கடவுள் கண்டு பிடிச்சிடுவான்... அவன் அவன் யானைய திருடி அமுக்கிட்டு குஜாலா சுத்திகிட்டிருகான்... அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது.... உடனே இன்னொரு எண்ணமும் வந்தது...
இந்த மாதிரி சின்ன சின்ன தப்புக்கெல்லாம் உடனே தண்டனை கிடைக்கிறதால ,, பினாடி பெரிசா ஒன்னும் தண்டனை கிடைக்காது... ஆனா அவங்களுகெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து அப்புறம் "கபீம்குபாம்" தான் கிடைக்கும்னு....



இதான்... இந்த எண்ணம் தான் நம்மள எப்போதுமே சந்தோஷமான சாமான்யனா வச்சிருக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக