பட்டுக்கோட்டை
மாட்டு சந்தைல எங்கூர் ஆள் ஒருத்தர் ஒரு ஜோடி வண்டி மாடு வாங்கிட்டு
வந்தார்.... எப்போதுமே மாடு விக்கிறவங்க, வாங்கின ஆள்கிட்ட
கொடுக்கும்போது கயித்த அவுத்துக்குவாங்க.... இதுதான் ஒலக வழக்கம்... ஆனா
எங்கூர் ஆள்கிட்ட மாட்ட வித்தவன் கயித்த அவுக்காம மாட்ட கொடுத்து
விட்டுட்டான்.... கூடவே ஒரு சாட்டை கம்பையும் கொடுத்து விட்டான்....
நம்மாளுக்கு சந்தோசம்... கயிறும்.. கூடவே ஒரு சாட்டை கம்பும் கிடைச்சுடுச்சுன்னு.... மாடு வீட்டுக்கு வந்துடிச்சு.... மறுநா மாட்டுக்கு தண்ணி வைக்க அந்த வீட்டு அம்மா மாட்டுகிட்ட போனா.... கிட்ட போகவே முடியல... சீறிக்கிட்டு பாச்சலுக்கு வருது... அந்தம்மா மட்டும் இல்ல.. யாருமே கிட்ட போக முடியல....
நம்மாளுக்கு
சிக்கலாயிடுச்சு.... பாச்ச மாட்ட வீட்டுல கட்டி வச்சு என்ன செய்ய....
அவுத்து தண்ணி காட்ட... வைக்க அள்ளி போட எந்நேரமும் ஆணா பொறந்தவன்
வீட்ல இருக்க முடியுமா?? குடியானவன் வீட்டுல பொண்டுக -புள்ளைக
அவுத்து கட்டாத மாட்ட வச்சுகிட்டு என்ன செய்ய.....? அப்படின்னுட்டு
மாட்ட வித்தவன் கிட்ட ஓடினான்...
அவன் தெளிவா சொல்லிட்டான்.... அட கூமுட்ட.... உன்கிட்ட மாட்ட விக்கும்போது கூடவே சாட்டை கம்பையும் கொடுத்தனுப்பினேனே.... எதுக்குன்னு நினைச்ச..... ??நம்ம வீட்டுல பொண்டுக புள்ளைகள வெரட்டி பாயுதுனுதாண்டா அத வித்தேன்.... நீயும் சந்தைக்கு ஓட்டு... எவனாவது சிக்குவான்னான்...
வேறென்ன செய்ய... நம்மாலும் அடுத்தவார திங்ககிழமை சந்தைக்கு ஓட்டிட்டு போய் கெட்டதுக்கு பாதியா வித்துட்டு வந்தான்...
நிற்க...
நிற்க...
கோகோ
கோலா, பெப்சி எல்லாம் டாய்லெட் கழுவ பயன்படுத்தலாம்... அத ஒரு கிளாஸ்ல
ஊத்தி அதுல ஒரு பல்ல போட்டா அது அப்படியே கரைஞ்சிடும்ன்னு எத்தனையோ
டெமோ வீடியோஸ் போட்டுட்டாங்க நம்ம இணைய தோழர்கள்.... அந்த
பெப்சியையும், கோக்கையும் கூடவே கொடுக்கிறானே... இந்த கே எப் சி, மெக்
டொனால்ட் காரன் எல்லாம்... எதுக்குன்னு நினைகிறீங்க??? அதேதான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக