வியாழன், 29 ஜூன், 2017

பெயர்- ஒரு வரலாற்று குறியீடு


Image may contain: 1 person
இப்போது "ஸ்" "ஷ்" "ஹ்" எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் மூன்று-நான்கு எழுத்துக்கள் கொண்ட பெயர்கள் புழக்கத்தில் இருக்கின்றன... இதற்கு அப்படி பெயர் வைப்பவர்கள் சொல்லும் காரணம் "பேரு மாடர்னா இருக்கனும்.. அப்போதான் பிற்காலத்துல வெளில போய் சொல்லும்போது கௌரவமா இருக்கும்"

பெயர் என்பது ஒரு அடையாளம்... பழைய பெயர்களை பார்த்தால் அதை வைத்து அவர்கள் எந்த மொழி, எந்த பகுதி, எந்த ஜாதி, எந்த வகையறா என்பதை கூட சொல்லி விட முடியும்.. பேரனுக்கு தாத்தாவின் பெயர்.. குலசாமியின் பெயர் என்று வைப்பார்கள்..

ஆனால் இப்போதைய பெயர்களை கேட்கும்போது அதில் தமிழன் என்ற அடையாளம், எந்த பகுதி என்ற அடையாளம், யாரின் பரன்பரை என்ற அடையாளம் தொலைந்துவிட்டது..

இப்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் தமிழரின் பெயர்.."சுந்தர் பிச்சை" இவர் யாரென்றே எனக்கு தெரியாது.. ஆனால் இவர் ஒரு தமிழர் என்று என்னால் எப்படி சொல்ல முடிகிறதென்றால்... அவரின் பெயர் கொடுத்த அடையாளம்.. இன்னும் பெயரியல் விஷயங்களில் வல்லுனர்களால் "பிச்சை" என்பது எந்த பகுதியில் வைக்கப்படும் பெயர் என்பதை கூட சொல்லி விட முடியும்...

பெயர்.. ஒரு அடையாளம்... பெரிய பொறுப்புகளை அடைய பெயர் ஒரு காரணமல்ல... பெரிய பொறுப்புகளுக்கு வரும்போது குஞ்சிதபாதமோ, பிச்சைக்கண்ணோ... பெருமையாக மாறும்...

உங்கள் அடையாளத்தை தொலைக்காதீர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக