வியாழன், 29 ஜூன், 2017

சனி பார்வை

சிவபெருமானின் மனைவி பார்வதி ஒரு அழகிய மாளிகையை கட்டி அதற்கான திறப்பு விழா நேரம் குறிக்க ஒரு ஜோசியரை அழைத்தார்.
சாஸ்திரங்களில் வல்லுனரான நமது ஜோசியர் பார்வதி தேவியாரிடம் "தாங்கள் இந்த மாளிகையை கட்ட தொடங்கிய நேரம் சனீஸ்வரனின் ஆதிக்கம் மிகுந்திருந்த நேரம்... ஆகவே இந்த கட்டிடம் நிலைக்காது...." என்று சொல்லிவிட்டார்....
Image may contain: 1 person, outdoor

உடனே கலக்கமடைந்த பார்வதி தேவி, சிவனை நச்சரிக்க தொடங்கினார்.... "நீங்கள் உடனே அந்தசனீஸ்வரனை சந்தித்து, பார்வதி கட்டிய மாளிகைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது... என ஆணையிடுங்கள்.... இது என்னுடைய கவுரவ பிரச்சினை" என்று சொல்ல.... சிவபெருமானோ..."இல்லை தேவியே.... சனி நினைத்ததை எப்படியும் முடித்துவிடுவான்... ஆகவே நீ வேறு ஏற்பாடு எதையாவது செய்...." என சொன்னார்....


வழக்கம் போல மனைவியின் அதிகாரத்துடன் சிவபெருமானை தொடர்ந்து நச்சரித்து சனீஸ்வரனிடம் கேட்கும்படி வற்புறுத்தினார் பார்வதி....

எல்லா கணவர்களையும் போலவே மனைவியின் முட்டாள்தனத்தை உணரவைக்க முடியாத சிவபெருமான் சனீஸ்வரனை சந்திக்க சென்றார்... போவதற்கு முன்பு..."பார்வதி.... நான் சனீஸ்வரனை சந்தித்து விஷயத்தை சொல்கிறேன்.... அவன் ஒப்புக்கொண்டால் பிரச்சினை இல்லை....ஒப்புக்கொள்ளவில்லை எனில் அங்கிருந்து என் கையில் இருக்கும் உடுக்கையை அடிக்கிறேன்.... நீ உடுக்கை சத்தம்கேட்டால் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மாளிகையை இடித்து விடு..... யாரும் கேட்டால்... டிசைன் சரி இல்லை... அதனால் இடித்துவிட்டேன் என்று சொல்லி விடலாம்... உனது கவுரவத்திற்கும் இழுக்கு வராது..." என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்...


சிவன் சனீஸ்வரனை சந்தித்து விஷயத்தை சொன்னதும்.... "அய்யனே.... இதற்காக நீங்களே வர வேண்டுமா.... யாரிடமாவது சொல்லிவிட்டால் நான் உடனடியாக தங்கள் உத்தரவை செயல்படுத்தி இருப்பேனே.... வந்ததுதான் வந்து விட்டீர்கள்... எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என சனீஸ்வரன் கேட்க.... பார்வதியின் மாளிகை தப்பித்த சந்தோஷத்தில்.. சிவனும்... என்னஉதவி வேண்டும் கேள் சனீஸ்வரா... என சொன்னார்....


சனீஸ்வரன் உடனே... "அய்யனே.. தங்களின் ஆனந்த தாண்டவத்தை கண்டு வெகுநாட்கள் ஆகிறது... எனக்காக ஒரே ஒரு முறை ஆனந்ததாண்டவம் ஆடுங்களேன்..." என கேட்கிறார்....


பார்வதியின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்கப்போகும் சந்தோஷத்தில் இருந்த சிவபெருமான்.. உடனே ஆனந்த தாண்டவமாடுகிறார்..... அவரது கையில் இருக்கும்உடுக்கை தானாகவே ஆடுகிறது.... உடுக்கை சத்தம் கேட்ட பார்வதியோ...."ஐயோ.. இந்த சனிப்பய ஒத்துக்கல போல... நாமளே மாளிகையை இடிச்சுடலாம்.."என்று பொக்லைன் இயந்திர ஓட்டுனர்களுக்கு ஆணையிட்டு மாளிகையை இடிக்க சொல்கிறார்....

ஆக... இதிலிருந்து கிடைக்கும் நீதி... சனியன் பார்வை பட்டுவிட்டால்... அதை சனியனாலேயே கூட தடுத்து நிறுத்த முடியாது....

நிற்க....





பெங்களூரு கலவரத்தின் காரணமாக நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த 7
கிலோமீட்டர்கள் நடந்து வந்த மணமக்கள்....

இப்போது அந்த மணமகனை பார்வதி கட்டிய மாளிகையுடன் ஒப்பிட தோன்றினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.... அது அவன் விதி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக