காலம்
காலமாக ஆதிக்க சக்திகளால் (ஆண், உயர்சாதி,பணக்காரன்)
அடக்கி-ஒடுக்கப்பட்டவர்கள் , அந்த ஆதிக்க சக்திகளுக்கு நிகராக வர வேண்டும்
என்பதற்காக , நல்லோர்களால் உண்டாக்கப்பட்ட பாதுகாப்பு சட்டங்களும்-
சிறப்பு ஒதுக்கீடுகளும் இப்போதுதான் ஓரளவிற்கு வெற்றி அடைய
ஆரம்பித்திருக்கிறது...
இவைகளை எவ்வளவு தூரம் பயன்படுத்தி முன்னேற்றத்தை தன்வசமாக்க முடியுமோ அவ்வளவு தூரம் செயல்படுவதே ஒடுக்கப்பட்டவர்கள் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்...
ஆனால்
சமகால நடவடிக்கைகளை பார்க்கின்ற பொழுது அவர்கள் "முன்னேற்றம்-சமம்" என்ற
பாதைய தவறவிட்டு வேறொரு பாதையில் பயணிக்க தொடங்கி இருப்பது கண்கூடாக
தெரிகிறது..
ஒரு பயிரை ஆடு -மாடுகள் மேய்ந்துவிடாமல் காக்கவே வேலி அமைக்கிறோம்....
அந்த வேலியை பிடுங்கி ஆடு-மாடுகளை அடிக்க பயிர்கள் நினைத்தால் என்னாகும்??
பாதுகாப்பு சட்டங்களை ஒடுக்கப்பட்டவர்கள் அப்படித்தான் உபயோகிக்கிறார்கள்...அந்த சட்டத்தை காட்டி பாதுகாப்பாக முன்னேறாமல், ஒடுக்கியவர்களை எதிர்க்கும் முழு பலமும் பெறும் முன்பாகவே அந்த சட்டத்தையே ஆயுதமாக்கி ஒடுக்கியவர்களை தாக்கத்தான் நினைக்கிறார்கள்.... அதுவும் ஒதுங்கி போகிறவர்களை வம்பிழுத்து தாக்க நினைக்கிறார்கள்...
இதன் விளைவு முற்றிலும் எதிர்பதமாக அமையும் என்பதை "என்"போன்ற , எதிர்காலத்தை மிகச்சரியாய் "ஊகிக்கும்" சிந்தனையாளர்கள் ( கூல்............. கூல்........... டென்ஷன் ஆகாம தொடர்ந்து படிங்க ) சொன்னாலும் அதை அவர்கள் சரியாய் புரிந்துகொள்ளாமல் சண்டைக்கு வரும் பொழுது..... "எப்படியோ கெட்டு நாசமா போகட்டும்" என்ற எண்ணம் எழுந்தாலும் கூட.... அடுத்த சில வினாடிகளிலேயே... "அவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்... அவர்களை எப்படியாவது ஒழுங்கான பாதையில் திருப்பி விட வேண்டும்" என்ற தணியாத தாகமே.... தொடர்ந்து அறிவுரைகளை வழங்க எங்களை வற்புறுத்துகிறது..
எங்கள் சிந்தனை.. ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றம்..!!!
எங்கள் நோக்கம்... பாதிக்கப்பட்டவர்களின் வளர்ச்சி...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக