ஒரு
பெண்ணுடனான என் உடலுறவு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொண்டு...
"புதிதாக திருமணமானவர்கள் தங்கள் முதலிரவில் திருப்திகரமாக இருப்பதில்லை
என்று உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன... ஆகவே, புதிதாக திருமணம்
செய்துகொள்வோருக்கு வழிகாட்டும் பொருட்டே நான் என்னுடைய அனுபவங்களை பதிவு
செய்கிறேன்" என்று சொன்னால் என்ன நிகழும்...??
ஒன்று எனக்கும்-அந்த பெண்ணுக்குமான அந்தரங்க உறவு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனை
செய்து பார்ப்பார்கள்... அல்லது வக்கிரம்-வன்மம்- பொது இடங்களில் எப்படி
பேசுவது என்று கூட தெரியாத காட்டுமிராண்டி, பெண்கள் இருக்கும் இடத்தில்
இப்படி எல்லாம் எழுதுகிறாயே.. உனக்கு வெட்கமே இல்லையா.... என்றெல்லாம் ஓடி
வந்து பொங்கல் வைப்பார்கள் சமூக சிற்பிகள்...
உடலுறவு
என்பது எனக்கும், உலகில் ஏதோ சிலருக்கும் மட்டும் தான் தெரிந்த விஷயம்
என்பது போலவும், அதை நான் பொதுவெளியில் பேசி அசிங்கப்படுத்தி விட்டதாகவும்
"நவீன நாகரீக காவலர்கள்" பொங்கலோ பொங்கல் வைப்பார்கள்... உலகில் எல்லா
ஜீவராசிகளும் பிறக்க காரணமாக இருப்பது அந்த உடல் உறவு தான்....
பருவமும்-தகுந்த துணையும் கைவராதவர்களை தவிர ஆண்-பெண்,
படித்தவர்-படிக்காதவர்-ஏழை- பணக்காரன் என்ற எந்த விதிவிலக்குமன்றி எல்லோருக்கும் பொதுவான விஷயம் தானே "உடலுறவு"
அப்புறம் ஏன் பொங்கல் வைக்கிறார்கள்??? மானுடம் தோன்றிய காலத்தில் உடலுறவுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் தான் இருந்தது... ஒரு ஆண்.. ஒரு பெண்.. அவ்வளவுதான்.. தாய்-மகன்-தந்தை -மகள்-சகோதரன்-சகோதரி என்ற எந்த விதி விளக்கும் இல்லாமல் தான் இருந்தது... ஆனால் நாகரீகம் வளர வளர தங்களுக்குள் குழுக்களாக பிரிந்து, குடும்பமாக பிரிந்து இந்த உறவுகளுக்குள் "உடலுறவு பந்தம்" கூடாது என்ற நிலையை எட்ட இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கிறது.... இன்றைய உலகில் வாழும் நாம் சில உறவுக் கோட்பாடுகளையும், சில அந்தரங்க கோட்பாடுகளையும் பின்பற்றி வருகிறோம்...
அவற்றில்
சில தான் உடலுறவு பற்றியும், ஆண்களுக்காக-பெண்களுக்கான பாலியல், உடல்
விஷயங்கள் விஷயங்கள் பற்றியும் அறிந்தும்-அறியாமலும் பேசுவதும்
எழுதுவதும்....
ஆண்களை
விட பெண்களுக்கு இந்த உடல் கூறியல் விஷயங்களில் கூடுதலாய் சில நிகழ்வுகள்
இருப்பது போல கூடுதல் ரகசியங்களும் இருக்கவே செய்கிறது.. அது எல்லா
பெண்களுக்கும் பொதுவான விஷயம் தான்... உங்கள்-என்-பக்கத்து வீட்டு
பெண்களுக்கு எல்லாம் பொதுவான விஷயங்கள் தான்... ஆனால் அதை பற்றி நம்மில்
யாரும் பொதுவெளியில் பேசுவது இல்லை... அதிலும் இரு மாற்றுப்பாலினத்தவர்கள் ,
தங்களுக்குள் உடல் பூர்வ பாலுறவு இல்லாதவர்கள் நிச்சயம் பகிர்ந்துகொள்ளவே
மாட்டார்கள்... அப்படியே பகிர்ந்து கொண்டாலும் அதில் நிறைய வார்த்தை
கட்டுப்பாடுகளுடன் பட்டும்-படாமலும் தான் பகிர முடியும்... நம்முடைய உடல்
குறைகளை, வலிகளை நமக்கானவரிடம் பகிரலாம்.. அதை ஊருக்கு சொல்ல நாம் யார்??
நமக்கு மட்டும் தான் அப்படி நிகழ்கிறதா என்ன??
தமக்கு தாமே "நான் தான் இந்த உலகத்தை திருத்த பிறந்தவன்/ள் என்ற
கிறுக்குத்தனமான தலைகணம் கொண்டவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும்...
ஒரு
சக்கரத்தின் அடியில் இருக்கும் பகுதி எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறியதோ..
அதே போல கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக இறங்க வேண்டுமே தவிர..... மேலே ஏறியது
அடுத்த நொடி கீழே இறங்கினால் நிச்சயம் அந்த சக்கரம் உடைந்துதான் போகும்....
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் மாறி வந்த விஷயங்கள் அனைத்தும் தப்பு என்பது போல, சில ஆண்களும்-பெண்களும் அப்படியான விஷயங்களை பொது இடங்களில் போட்டு உடைக்கும் போது திடீரென தாக்கும் அதிர்ச்சியும், முகம் சுழித்தலும் தவிர்க்கவே முடியாததாகி விடுகிறது....
நான்
முதலில் குறிப்பிட்ட உடலுறவு விஷயத்தை பற்றி பொது வெளியில் பதிந்ததும்
பொங்கல் வைத்தவர்கள் எல்லாம்.. அப்படியான வேறொரு பெண்ணே முகம் சுழிக்க
கூடிய ஒரு விஷயத்தை ஒரு பெண் பொதுவெளியில் பந்தி வைத்த உடன்.. "ஆஹா..
அற்புதம்... செம்ம... கிரேட்... நீங்க கலக்குங்க.." என்பது போன்றேலாம்
உசுப்பி விடுகிறார்கள்...
என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது.... அப்படி ஒரு பெண் பதிவிடும் போது, நிச்சயம் அவள் எழுதும் விஷயம் ( உதாரணமாக பருவமடைதல், மாதாந்திர ரத்தம் வெளியேறுதல்... போன்ற விஷயங்கள்.. ) உங்கள் வீட்டு பெண்களுக்கும் நிகழ்கிறது தானே.... யாரோ ஒரு பெண் பகிர்வதை "ஆசம் " என்று புகழும் நீங்கள்.... உங்கள் வீட்டு பெண்களை ஏன் அதை பற்றி பொதுவெளியில் பேச வைக்க கூடாது?? நீங்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆயிற்றே....
அவர்
சொல்வது நல்ல விஷயம் என்று நீங்கள் மனசார நினைத்தால்... அதை உங்கள்
வீட்டு பெண்களிடம் சொல்லுங்கள்... அவர்களையும் இப்படியான பொதுவெளிகளில்
அதுபற்றி பேச வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.... அப்படி நீங்கள்
செய்தால்.. அதுதான் உங்களின் உண்மையான புரிதலே தவிர.... எழுதிய ஒருவரை
உசுப்பி விட்டு தங்களை முற்போக்கு சிந்தனை வாதிகளாய் காட்டிக்கொண்டு...
அவரை அடுத்த அந்தரங்க விஷயத்தை பகிர ஊக்குவித்தால்.... உங்களை விட கேவலமான
ஜென்மங்கள் உலகத்திலேயே இல்லை...
மாறாக....
எவளோ ஒருத்தி எழுதுகிறாள்... நம் வீட்டு பெண்கள் தான் பத்திரமாக
இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் உசுப்பி விட்டால்..... நிச்சயம் உங்கள்
வீடுகளில் எவனோ ஒருவன் "கமென்ட்" போட்டுக்கொண்டிருப்பான்....
ஏனென்றால்.. கெடுவான்.. கேடுநினைப்பான்....
ஏனென்றால்.. கெடுவான்.. கேடுநினைப்பான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக