வியாழன், 29 ஜூன், 2017

இறைவன் எழுதும் கிளைமாக்ஸ்

குஷி திரைப்படம் ஆரம்பிக்கும் போதே கல்கத்தாவில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையையும் , மயிலாடுதுறை பூம்பாரை கிராமத்தில் பிறக்கும் ஒரு பெண்குழந்தையும் காட்டி, பின்னணியில் "இவர்கள் இருவரும் தான் கடைசியில் இணையப்போகிறார்கள்... எப்படி என்பதுதான் திரைக்கதை.. " என்று ஒரு குரல் ஒலிக்கும்.
No automatic alt text available.
அதுபோல இறைவன் ஒவ்வொருவரை படைக்கும் போதும் அவரது மரணத்தையும் குறித்து விடுகிறான்.... இவரது மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த இடத்தில்தான் நிகழ வேண்டும்.. என்று... 


உதாரணமாக தமிழ்நாட்டில் பிறக்கும் ஒருவரின் மரணம் கார் விபத்தில், அமெரிக்காவில் நிகழ வேண்டும் என்று கிளைமாக்ஸ் எழுதி விடுவான்.... பிறகு திரைக்கதை.... முதலில் இவனை அமெரிக்காவிற்கு நகர்த்த வேண்டும்.... எப்படி?? நன்றாக படித்து, ஸ்காலர்ஷிப் பில் அமெரிக்கா சென்று..... இப்படியாக அமையும் அந்த வாழ்க்கை திரைக்கதை...

மகாத்மா காந்திக்கும் அப்படித்தான் "துப்பாக்கி குண்டடிபட்டு மரணம்..." என்று கிளைமாக்ஸ் எழுதிய பிறகு....


அந்த மரணத்தை நோக்கி திரைக்கதையை தள்ளுகிறான் இறைவன்... தென்னாப்ரிக்காவில் நிறவெறி கூட்டத்தின் மத்தியில் இறக்கி விடுகிறான்.. ஆனால் தன்னுடைய பூர்வ ஜென்ம பலத்தின் காரணமாக அங்கிருந்து நகர்ந்துவிடும் காந்தியை.. இங்கே பிரிடிஷ்காரர்களை எதிர்த்து போராட வைக்கிறான்... ஆனால்.. அதிலும் குண்டடி மரணம் நிகழாமல் தப்பிக்கிறார் காந்தி....


என்னதான் பூர்வஜென்ம புண்ணியங்கள் காத்தாலும்.. இறைவன் எழுதிய கிளைமாக்ஸ் எப்படியாவது நிறைவேற வேண்டுமே...

கோட்சேவின் கையில் துப்பாக்கி....

நீதி:- இறைவன் மிகப்பெரியவன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக